சினிமா செய்திகள்
அமெரிக்காவில் முன்னதாகவே வெளியாகும் பொன்னியின் செல்வன்-2... 14-ந்தேதி முன்பதிவு தொடக்கம்
சினிமா செய்திகள்

அமெரிக்காவில் முன்னதாகவே வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-2'... 14-ந்தேதி முன்பதிவு தொடக்கம்

தினத்தந்தி
|
12 April 2023 5:48 PM IST

அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த படத்தில் இருந்து 'அக நக', 'வீர ராஜ வீர' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து இன்று 'சிவோஹம்' என்ற பாடலை படக்குழு வெளியிட உள்ளது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படம் அமெரிக்காவில் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் நிலையில், அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே 'பொன்னியின் செல்வன்-2' வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள்(14-ந்தேதி) தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.


#CholasAreBack with biggest ever release in the USA, across all major Cinema chains & formats ️ @AMCTheatres @Cinemark @HarkinsTheatres @RegalMovies @IMAX @4DXglobal

Premieres in the USA on 27th April 2023 ️✨#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu,… pic.twitter.com/VhDJz2pcQi

— Lyca Productions (@LycaProductions) April 11, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்